உன்னை பார்க்க, காத்திருந்தேன் பார்க்க இயலுமா என்று வியந்திருந்தேன் உன்னால் நான் பெற்றதும் பல, இழந்ததும் சில பெற்றதோ மறக்குமா, இழந்ததோ யாதுமா நினைவிலோ நீ இருக்க, கனவில் நீ மாற மாற்றம் நீ கொண்டாலும், என்னுடனே நீ வாழ மாறாதது ஏதும் உண்டோ, மாற்றம் ஏற்க நீ இருக்க நான் கொண்ட மாற்றங்களின் தடயமும் நீ தானோ நீ இல்லாமல் பித்தனென், நீ வந்ததும் என்னை அறிந்தேன் செயல்பாட்டை நாம் கற்றோம், விடைகளை நாம் பயின்றோம் ஒன்றாக நீ இருக்க, அச்சங்களை நான் துளைத்தேன் காலமும் நீ இருக்க, அர்த்தங்களை நான் அறிவேன் - ஹரிஹரன் © 2023 Hariharan Arunachalam. All rights reserved.