Skip to main content

Posts

Showing posts from March, 2025

அடையாளம் !

ஒருமை உணர உருவான கருவியோ பல கருவி முளைக்க, பயன் மாறி போனதோ பயன் மாறி போனதால், பிரிவினை வழந்ததோ அக்கருவி திறந்தால் பிரிவினை முடியுமோ புது ஒருமை வளர மரு கருவி தேவையோ இச்சூழலில் சிக்கிய மனிதர்கள் நாம்தானோ இறுதியில் இங்கு மனிதம் மட்டும் ஜைகும்மோ ஜெயித்தாலும் இறுதியில் மனிதமும் ஓர் கறுவியோ                                                                              - ஹரிஹரன் ©  2025   Hariharan Arunachalam .  All  rights reserved.

புதிர் தான் விடையா ?

 கேள்விகள் ஆயிரம், விடைகளும் கோடியாம் விடைகள் விளங்க, இன்னொரு கேள்வியாம் உயிர் ஈன்ற நாள்முதல், கேள்விகள்  முடியவில்லை ஒரு விடை முடிய, மாரு விடை தேடினோம் எதை நோக்கி நாம் தேட ? பாதை இங்கு பல உண்டு பாதைகளும் முடிவதில்லை, தேடல்களும் ஓய்வதில்லை அழிய தான் வந்தோமோ ? இதுவும் ஒரு கேள்வி தானோ ? புதிர் ஒன்று விளங்காமல், கேள்வி பல கேட்டோமோ புதிர் விளங்க கேள்வி கேட்க, நாம் இங்க மறந்தோமோ  ? இப்புதிர் புரிந்த மனிதர், இவ்வுலகில் வாழ்வது உண்டோ ?                                                                                 - ஹரிஹரன் ©  2025   Hariharan Arunachalam .  All  rights reserved.