கேள்விகள் ஆயிரம், விடைகளும் கோடியாம்
விடைகள் விளங்க, இன்னொரு கேள்வியாம்
உயிர் ஈன்ற நாள்முதல், கேள்விகள் முடியவில்லை
ஒரு விடை முடிய, மாரு விடை தேடினோம்
எதை நோக்கி நாம் தேட ? பாதை இங்கு பல உண்டு
பாதைகளும் முடிவதில்லை, தேடல்களும் ஓய்வதில்லை
அழிய தான் வந்தோமோ ? இதுவும் ஒரு கேள்வி தானோ ?
புதிர் ஒன்று விளங்காமல், கேள்வி பல கேட்டோமோ
புதிர் விளங்க கேள்வி கேட்க, நாம் இங்க மறந்தோமோ ?
இப்புதிர் புரிந்த மனிதர், இவ்வுலகில் வாழ்வது உண்டோ ?
- ஹரிஹரன்
© 2025 Hariharan Arunachalam. All rights reserved.
Comments
Post a Comment