வரலாறு சொன்ன விடுதலை பாடங்கள் நாம் வாழ இறந்த மகான்களும் முன்னோர்களும் கண்ட கனா நிறைவேற்ற வழி அன்று இல்லையோ பிற்கால தலைமுறைக்கு வழி விளக்கிப் போனாரா வழி இன்று இருந்தாலும் கனா மாறி போனதென்ன கனா பல இருந்தாலும் திசை சிதறி போகிறதோ அல்லது பலருக்கு இங்கு வழி இன்னும் இல்லையோ இருந்தும் ஒரு கூட்டம், இல்லாமலும் ஒரு கூட்டம், இருந்தும் செயல் இல்லா சுதந்திரத்தின் பயன் உண்டோ இல்லாமல் போராடி வந்த வழி வரலாறோ இறுதியில் அவ்வழியில் செய்த செயல்களும் வரலாறோ -ஹரிஹரன் © 2025 Hariharan Arunachalam. All rights reserved.
மனித பயணம், அது முடியா ஒன்று மனித பயணம், அது விலங்கா ஒன்று பயணம் ஒன்று இருபது அறிந்தோம், திசைகள் பல உள்ளபொதும், போய் சேரும் இடம் அறிவோமா.. இலக்கு முடிவு செய்த பயணம் இல்லையோ, இது பயணம் முடவுசெய்யும் இலக்கு தானோ.. ஒருமை இல்லாமல் பயணம் வீணோ, பயணம் இல்லா ஒரிமையும் வீணோ.. சரியான பயண முறையால், பயணம் இங்கு நீலுமோ பயணம் தவறாக, இலக்கு கூடிவருமோ.. - ஹரிஹரன் © 2025 Hariharan Arunachalam . All rights reserved.